செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூர், மேலையூர் மணியம் தெருவில் போடப்பட்டுள்ள சாலை மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.