காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லன் நகரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி வருகிறது. சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?