திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் நல்லூர் பகுதியில் உள்ள 4 அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பிற்கு மேல் கிடையாது. மேலும் இந்த ஊரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அவசரத்துக்கு தபால் அனுப்ப தபால் நிலையமும் இல்லை, விளையாடு மைதானமும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு ஒரு வழி கிடைக்குமா?