சென்னை 200 அடி இன்னர் ரிங் சாலை. ரெட்டேரி முதல் மாதவரம் செல்லும் வழியில் மின்சார பணிக்காக பல்லம் தோண்டப்பட்டு பின்பு மூடப்பட்டது. பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமலே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறுகிய சாலையில் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சீர் செய்யுமா?