செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி விரிவு சரஸ்வதி நகர், வள்ளலார் பிரதான சாலையில் பல குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் இந்த பகுதியில் உள்ள வீடுகளின் முன் பகுதியில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் கொசுக்கள் படையெடுத்து வருவதால் நோய் தொற்று ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது. தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற வழி பிறக்குமா?