அபாயகரமான சாலை

Update: 2022-12-11 14:08 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதிக்கும் பட்டு கூட்டு ரோடு பகுதிக்கும் இடையே இருக்கும் தெருவின் பெயர் பாலாண்டீஸ்வரர் கோவில் தெரு. இந்த தெருவின் நுழைவு பாதையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் பெய்த அடை மழையில் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது. இதனால் தெருவுக்கு உள்ளே செல்வதற்கும், தெருவிலிருந்து வெளியே செல்வதற்கும் பெரும் சிரமமாக உள்ளது. நடந்து செல்பவர்கள் கழிவுநீரில் நடந்து செல்வதால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்