சேரும் சகதியுமான சாலை

Update: 2022-12-11 14:04 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி சிவந்தி ஆதித்தன் நகரில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் தெருக்களில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலை சேரும் சகதியுமாக மாறிவிடுவதால் அங்கு வசிக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தை நடந்து செல்லக்கூட மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்வதால் போக்குவரத்து இடையூரும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு எப்போது கிடைக்கும்?

மேலும் செய்திகள்