திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை முதல் குண்டுமேடு ஈஸ்வரன் கோயில் வரை உள்ள நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்கள் அடிக்கடி சாலை விபத்துகளும், பெண்களின் நகை பறிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதோடு சமூக விரோத செயல்கள் நடக்கவும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் மின் விளக்குகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.