திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியக்களக்காட்டூர் கிராமத்தில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி பழுதடைந்து இடிந்த நிலையில் மோசமாக இருந்தது. எனவே புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி இடிக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளிக்கட்டிடத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.