ஆபத்தான பகுதி

Update: 2022-12-07 14:37 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து பிராட்வே செல்லும் பஸ்கள் பூந்தமல்லி டிரங்க் சாலையிலும், போரூர் செல்லும் பஸ்கள் போரூர் டிரங்க் சாலையிலும் சென்று வருகின்றன. இந்தநிலையில் இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் பகுதி ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்படாததால் அடிக்கடி இந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே மேற்கூறிய இடத்தில் போக்குவரத்து விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்