காஞ்சீபுரம் மாவட்டம் காமாட்சியம்மன் சன்னதி தெரு, பழைய ரெயில் நிலையம் அருகே, கடந்த் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பறை கட்டப்பட்டது. இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணியருக்கும் கழிப்பறை பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கூறீய கழிப்பறை மூடப்பட்டுள்ளது. எனவே பயன்பாடின்றி உள்ள கழிப்பறையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.