காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை இணைக்கிறது வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை. இந்த இடத்தில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் ஒரகடம் அமைந்துள்ளது. ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் பராமரிப்பின்றி மண் குவிந்தும், செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த மேம்பாலத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பல்வேறு இடைஞ்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே மேம்பாலத்தை பராமரிக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.