காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள பாலாங்டீஸ்வரர் கோவில் செல்லும் தெருவின் நுழைவு பகுதி மோசமான நிலையில் உள்ளது. சாலை சிதிலமடைந்தும், ஆங்காக்னே பள்ளம் விழும்ந்தும் காணப்படுகிறது. அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நடந்து செல்பவர்களுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த சாலை சில வாரங்களுக்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டது. ஒரு சிறிய மழைக்கே சாலை மீண்டும் சிதிலமடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.