காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிளாய் ஊராட்சியில் உள்ள ஆய குளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. எனவே இந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பள்ளி அருகே உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளத்தில் நீர் தேங்கி நிறப்தால் சாலை சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?