செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் பகுதிக்குட்பட்ட ஒரத்தி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக போதுமான இடவசதியும், மைதானமும் அமைத்து தரப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள பல இளைஞர்கள் ராணுவம் மற்றும் போலீஸ் வேலைக்கு செல்ல முயன்று வருவதால் விரைவில் இந்த பகுதியில் மைதானம் அமைக்க வழி செய்ய வேண்டும்.