காஞ்சீபுரம் மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட மிஸ்ரி நகரில் பூங்கா அமைப்பதற்காக இடம் உள்ளது. இந்த இடத்தில் சிறுவர்கள் பூங்கா அமைக்க கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் பூங்கா அமைக்கப்படவில்லை. எனவே அதிகரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கூறிய இடத்தில் சிறுவர்கள் பூங்கா அமைக்க வழி செய்ய வேண்டும்.