கால்வாய் மூடி சேதம்

Update: 2022-11-23 15:18 GMT

மதுரவாயல் பல்லவன் நகரில் உள்ள மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் மூடியானது சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கால்வாய் மூடியை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்