சென்னை பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகே உள்ள பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த சாலையில் தினமும் செல்லும் வாகனங்கள் அதிகமான வேகத்துடன் செல்கின்றன. இதனால் பள்ளிக்குழந்தைகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி எதிரே இருக்கும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் வழி செய்ய வேண்டும்.