செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஆனைக்குன்னம் பகுதியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் கடந்த 5 ஆண்டுகளாக பழுதாகி பயனற்ற நிலையில் உள்ளது. செடி கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் சேர்தும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு, பள்ளி போன்ற விஷ ஜந்துக்களின் இருப்பிடமாகவும் மாறி வருகிறது. எனவே சுகாதரத்தை இழந்து தவிக்கும் சுகாதார நிலையம் மீட்கப்படுமா?