சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2022-11-20 13:20 GMT

சின்ன காஞ்சீபுரம் பெரியார் நகரில் ஒரிக்கை செல்லும் மிலிட்டரி சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே இருக்கும் சாலையோரத்தில் உள்ள 2 மின் கம்பங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் அசம்பவிதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மின்சார வாரியம் இந்த மின்கம்பங்களை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்