
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள ஆழ்வார் தீர்த்த குளக்கரை மேற்கு (ஆவாகுட்டை) தெருவில் தேங்கும் கழிவுநீர் மழைநீருடன் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதி வழியே நடந்து செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து நோய் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆவாகுட்டையின் கிழக்கு பகுதியில் மழை நீர் வடிகால் அமைந்துள்ளது போன்று மேற்கு பகுதியிலும் அமைத்து மழைநீர் வெளியேறுவதற்கும் வழி செய்ய வேண்டும்.