திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சீரமைக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தோடு இருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்