திருவள்ளூர் மாவட்டம் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல் மற்றும் மணவாள நகர் இந்திரா காந்தி சிலை சிக்னல் உள்ளிட்டவை செயல்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் சூழலும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக சிக்னல் அமைக்க வழி செய்ய வேண்டும்.