பெரிய காஞ்சீபுரம் பெருமாள் தெரு வழியாக புதிய ரெயில் நிலையம், மீன் மார்க்கெட், ஏகாம்பரநாதர் கோவில், சிவகாஞ்சி போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த தெருவில் சமீபத்தில் பெய்த சிறிய மழைக்கே மழைநீர் தேங்கி விட்டது. வடிகால்வாய் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வடிகால்வாய் அமைத்து தர வழி செய்ய வேண்டும்.