அக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

Update: 2022-11-16 14:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புதுப்பட்டிணம் பஸ் நிலையம் முழுவதும் ஆட்டோ ரிக்க்ஷாக்கள், சிற்றுண்டி உணவகங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் இந்த பகுதியில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பஸ்கள் கூட பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றாமலே சென்று விடுகின்றன. இதனால் பெண் பயணிகள், மற்றும் முதியோர்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.இந்த நிலை மாறுமா? 

மேலும் செய்திகள்