காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு மாரியம்மன் கோவில் தெரு (அம்பேத்கர் விளையாட்டு திடல் எதிரே) மழை நீர் வடிகால் அமைப்பதற்காக கால்வாய் தோண்டபட்டது. ஆனால் இந்த கால்வாய் பாதுகாப்பில்லாமல் இருப்பதால் அடிக்கடி யாராவது தவறி விழுந்து விடுகிறார்கள். நேற்று கூட மாங்காடு பகுதியை சேர்ந்த ஒர் ஆண் கால்வாயில் தவறி விழுந்துவிட்டார். கால்நடைகளும் கால்வாய்க்குள் விழுந்து காயம்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?