காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியிலுள்ள தியேட்டர் பின்புறம் உள்ள திருமலை நகரில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் மாலை நேரத்தில் கூட அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மேற்கூறிய பகுதியில் உடனடியாக மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.
