ஊரப்பாக்கம் டீக்கடை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். நிழற்குடை இல்லாததால் சாலையில் நிற்கும் அவலத்திற்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படுமா?