செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அகரம் தென் முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட வெங்கம்பாக்கம் கிராமத்தில் ராஜீவ் காந்தி நகர் உள்ளது. இந்த நகரில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளை குரங்குகள் துரத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காடுகளில் விடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.