செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கருநீலம் கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியாகும். இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அதை இடித்துவிட்டு புதிய நீர் தேக்க தொட்டி அமைத்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படுமா?