செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மழை பெய்ந்ததால் ரெயில் நிலைய வளாகத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது. தண்ணீரில் மிதந்து கொண்டு தான் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே ரெயில் நிலைய வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.