காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் விநாயகர் கோவில் அருகே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலம் சீராக அமைக்கப்படாததால் வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே இந்த பாலத்தை மேம்படுத்தி சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.