காஞ்சீபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் புதிதாக நூலகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும், புத்தக வாசிப்பாளர்களும் நூலகத்தை திறக்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.