செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி திருத்தணி நகர் பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள கங்கா தெரு மற்றும் காவிரி தெருவில் மழைநீர் வடிகால்வாயில் கசடுகள் அகற்றும் பணிகள் முழுமையாக முடிக்கபடவில்லை. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. இது சுகாதார பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியே வராமல் தடுத்து தீர்வு காண வேண்டும்.