செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு தொடர் மழையால் நீர் தேங்கியவாறு உள்ளது. இதனால் பயணிகள் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து சென்று ரெயில் நிலையத்துக்குள் செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் ரெயில் பயணத்தையே தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்நிலைய அதிகாரிகள், கவனித்து தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.