காஞ்சீபுரம் மாவட்டம் நூக்கம்பாளையம் சாலை, பெரும்பாக்கம் மெயின் ரோட்டில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் நடமாடவும், படுத்து உறங்கவும் செய்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையில் செல்லும் ஒருவித அச்சதுடனே கடந்து செல்கின்றனர். விபத்துக்கள் ஏற்படவும் இது வழிவகுக்கிறது. அதிகாரிகள் கவனித்து மாடுகளை அகற்ற விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.