கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-31 06:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் தும்பவனம் மழைநீர் வடிகால்வாய் புதர் மண்டி காட்சியளிக்கிறது. மழைக்கு முன்னதாக மழை நீர் கால்வாய்கள் துார்வாரப்படும் என மாநகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து வரும் இந்த கால்வாய் இன்னும் துார்வாரப்படாமல் உள்ளது. கால்வாயில் செடிகள் முளைத்து காணப்படுவதால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் குட்டை போல் தேங்கி உள்ளது. கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?காஞ்சீபுரம் மாவட்டம் தும்பவனம்

மேலும் செய்திகள்