காஞ்சீபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு அருகே, வெங்கடாபுரம் என்னும் ஊர் உள்ளது. வந்தவாசியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில், வெங்கடாபுரத்திற்கு செல்லும் வழியில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டது. இந்த பெயர் பலகையை அருகில் உள்ள வேப்பமரத்தின் மரக்கிளை மறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள் . எனவே மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.