காட்சிப்பொருளான குப்பை தொட்டி

Update: 2022-10-31 06:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தம் பகுதியில், செட்டிப்புண்ணியம் ஊராட்சி சார்பில் குப்பைதொட்டி ஒன்று வைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கத்தின்போது இந்த குப்பை தொட்டி சாலைஓரத்தில் வைக்கப்பட்டது. தற்போது, இந்த குப்பை தொட்டியானது கேட்பாரற்று தலைகீழாக கிடக்கிறது. இதனால், குடியிருப்புவாசிகள் குப்பையை சாலையிலேயே போட்டு விடுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்