சென்னை வில்லிவாக்கம் செங்குன்றம் சாலை 5-வது தெருவில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மழை காலங்களில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் தெருவே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் தெருவில் கொட்டப்படும் குப்பைகள் சாலை முழுவதும் பரவி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.