திருவொற்றியூர் பகுதியிலுள்ள டி.எச். சாலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. நோய் தொற்று ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு சம்பந்தபட்ட நிர்வாகம் வழி செய்ய வேண்டும்.