திருவள்ளூவர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நசரத்பேட்டை போக்குவரத்து சிக்னல் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. வரதராஜபுரம் பகுதியிலிருந்து மேப்பூர், அகரமேல், நசரத்பேட்டை செல்லும் மக்கள் குறிப்பாக முதியோர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும்போது விபத்துக்கள் நடக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?