சென்னை அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் எப்போதும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்த ரெயில்வே கேட் அருகே உள்ள நடை மேம்பாலமும் மூடியபடியே இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இங்கு உள்ள 6 ரெயில்வே தண்டவாளங்களை கடந்து தான் சென்று வருகிறார்கள் . இந்த தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்படுகிறது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை.