சென்னை அரும்பாக்கம் உத்தநாச்சி அம்மன் கோவில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் போடப்பட்ட மூடியானது உடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த நடைபாதையில் நடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடப்பவர்கள் தடுக்கி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே நடைபாதையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.