செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம்-குன்றத்தூர் இடையே செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.