திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ அலுவலகம் மெயின் ரோடு வளைவு பகுதியில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த இடத்தில் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. பொதுமக்களும் அப்பகுதியை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் தேங்கியுள்ள தண்ணீரில் தவறி விழும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.