சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே உள்ள மரம் ஆபத்தாக காட்சியளிக்கிறது. இந்த மரம் நிற்கும் இடம் தற்போது மழை நீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டபட்ட இடம்.சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த பள்ளத்தில் மழை நீர் நிரம்பி இருக்கிறது. இந்த மரம் மழை நீர் வடிகால்வாயில் நிற்பதால் எந்த நேரத்திலும் மண் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதுஎனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.