திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மஹாலின் மொட்டை மாடியில் ஏர்டெல் டவர் நிறுவப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த டவரின் மீது தினமும் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கி செல்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் டவரில் இருந்து இறங்கி வரும் குரங்குகள் வீடுகளின் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. உணவுப்பொருட்களை நாசம் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?