திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு பெரியகளக்காட்டூர் பகுதியில் ஒரு சமுதாய கூடம் கூட இல்லை. இதனால் ஏழை எளிய மக்களின் திருமணங்கள் குளத்தங்கரையில் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து ஊருக்கும் பொதுவாக ஒரத்தூர் கூட்டு ரோடு என்கிற திருவாலங்காடு தக்கோலம் நெடுஞ்சாலையில் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும் என ஊர்மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.