திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் பகுதிக்குட்பட்ட அரியன் வாயில் 3-வது தெருவில் சீரான கால்வாய் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் குடிநீரில் கழிவு நீரும் கலந்து வருகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு மேற்கூறிய பகுதியில் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.